கடந்த 5 மாதங்களாக திரையுலகமும், திரையரங்கமும் மூடியுள்ளதால் டிஜிட்டல் ரிலீஸும் ஓடிடி தளங்களுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. திரையுலகினர்களும் நேரடியாக படங்களை டிஜிட்டலில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷின் இரண்டு தெலுங்கு படங்கள் இணைய இருக்கு.

கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘பெண்குயின்’ படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள மேலும் இரண்டு படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ‘மிஸ் இந்தியா’ படத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ‘குட் லக் சகி’ படத்தை 13 கோடிக்கு அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்விரு படங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது. சீக்கிரமே ரிலீஸ் தேதி அற்விக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து மூன்று படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு ஹாட்ரிக் அடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்..