‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் டைரக்டர் மணிரத்னம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கேடரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு படத்தில் என்ன கேரக்டர் என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.