ஹாலிவுட்டின் பிரபலமான காமிக் கதாப்பாத்திரமான ப்ளாக் பந்தர் கேரக்டரில் நடித்து உலகமுழுக்க பிரபலமான நடிகர் தான் சாட்ஸ்விக் போஸ்மேன்.

மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற திரைப்படத்தில் பிளாக் பேந்தராக அறிமுகமான நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன், அந்த கதாபாத்திரம் மூலமாக மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து ‘ப்ளாக் பாந்தர்’ படத்தில் சோலோவாக கலக்கிருந்தார். அந்த படம் 7 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

தற்போது ‘ப்ளாக் பந்தர் 2’ படத்துக்கான வேலைகள் துவங்கி நடந்து வந்த நிலையில் போஸ்மேன் கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக கேன்சரோடு போராடிவந்த இவர் தனது 43வது வயதில் மரணித்து ரசிகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.