அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது அரியர் மாணவர்களிடையே பெரிய வரவேற்பையும் கல்வியாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டாலும் அரியர் கிளியர் ஆகவில்லையே என்ற கலக்கத்தோடு திரிந்தனர் இந்நாள் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் . கட்டணம் செலுத்தி இருந்தால் இறுதிப் பருவத்தேர்வை விட அத்தனை அறியர்களும் ஆல் கிளியர் என்ற அரசின் அறிவிப்புக்குப் பின்னர் அரியர் மாணவர்களின் ஆனந்தக் கூத்தாட்டத்தால் சமூக வலைதளங்கள் ஆரவாரத்துடன் திளைத்திருக்கின்றன.

இதெல்லாம் சாதாரணமப்பா என்று இருந்த திருச்சி மாணவர் இது கனவா என்று கில்லி பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவர் கூறியதாவது: "கண்டிப்பா நம்ம அரியர் எல்லாம் கிளியர் பண்ணனும் நம்ம இப்டியே விட்டுட்டு இருக்க கூடாது னு யோசிச்சுட்டு இருந்தேன். அதுக்காக நான் நிறைய பிளான்ஸ் எல்லாம் யோசிச்சேன். யோசிச்சு ஒரு ப்ளான் பண்ணிட்டு இருக்கும்போது தான் எடப்பாடி ஐயா கடவுள் என்று சிரித்துக்கொண்டே இன்ஜினியர் மாணவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உதயமா இருந்தார்.

இந்த மாதிரி ஒரு அறிக்கையை ரிலீஸ் பண்ணினாரு, நாங்க வந்து ஹாப்பியா இருக்குமோ இல்லையோ அரியர்ஸ் வச்சிருக்கிற ஒவ்வொரு வீட்டிலேயும் அவங்களோட அம்மா அப்பா ரொம்ப ஹாப்பியா இருக்காங்க" இவ்வாறு அவர் கூறினார்.