சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது : தாய்மார்களுக்கு இரண்டு பேர் காலம் வரை 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது இத்திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் வளர் இளம் பெண்களுக்காக சுகாதாரத் திட்டம் பிரசவ பிரணாப் திட்டம் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் அம்மா ஆரோக்கிய திட்டம் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் அம்மா மருந்தகம் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு ஐந்து வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கைகளை தானமாகப் பெற்று சேர்ந்த திரு நாராயண சாமி அவர்களுக்கு நாட்டிலேயே முதன்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை சென்னையில் டார்வின் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. மாண்புமிகு அம்மாவின் ஆட்சி 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி ஸ்கேன் போன்ற நிலை உயர்த்தப்பட்டன. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 14823 மருத்துவர்கள் 14 ஆயிரத்து 588 செவிலியர்கள் உட்பட 32660 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு புற்று நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவமனைகள் உயர் தொழில்நுட்பக் கருவி மூலம் நிறுவப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் சிகிச்சையளிக்கும் வகையில் நிறைவடையும் வகையில் உள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார்.