‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ திரைப்படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் இயக்குநரானார். ‘கைதி’ பட வெளியிட்டுக்கு முன்னரே இவருக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படத்தை முடித்தக் கையோடு லோகேஷ் கனகராஜ் யாரோடு அடுத்து கூட்டணி இணைவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஜினி நடிக்கும் படத்தை இவர் அடுத்து இயக்குனர் என்றும் சொல்லப்பட்டது ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவர் அடுத்ததாக, நடிகர் கமலுடன் இணையவுள்ளாராம். ரஜினி படத்துக்கு முன்பு, விரைவாக இப்படத்தின் வேலைகள் நடக்கவுள்ளதாம். முழுக்க முழுக்க பக்கா அரசியல் சார்ந்த கதை இது எனவும் கூறப்படுகிறது. 2021 தேர்தலுக்கு முன்னர், இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.