சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் கொரோனாவுக்கு AD5-ncov என்ற தடுப்பூசியை கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் தற்போதைய விலையாக ரூ.10,800 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியூ ஜிங்ஷென் கூறியதாவது, ''சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்படும்'' என்றும், ''மக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள கிராமங்களுக்கு இந்த ஊசி அவசியம் இல்லை எனவும் கூறினார்.
மேலும், அனைத்து மக்களும் இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறினார்.

இதுவரை, இரண்டு முறை தடுப்பூசி மக்களிடையே சோதிக்கப்பட்டு உள்ளது. முதல் தடுப்பூசியின் 97 சதவீதம் வீரியமாக செயல்படுகிறது. முதல் தடுப்பூசி செலுத்திய பிறகு 28 நாட்கள் பிறகு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த ஊசியை போட்டுக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனை இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் 1 ஊசியில் குணமடைந்தவர்கள். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் 2 ஊசி போட வேண்டியுள்ளது .

ஒரு முறைக்கு 4 மைக்ரோ கிராம் என்று விகிதத்தில் செலுத்தப்படுகிறது . இந்த ஊசியை ஒரே நேரத்தில் செலுத்திக் கொள்ளலாம். இரண்டும் சேர்த்து 1000 யுவான் ஆகவும் இந்திய மதிப்பில் ரூ .10,796 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி சந்தைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.