Monday, August 24, 2020

யூட்யூப் ட்ரெண்டிங்கில் கலக்கும் ‘தி பேட்மேன்’ டீஸர்...

டிசி காமிக்ஸ் ரசிகர்கள் தற்போது பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ‘தி பேட்மேன்’ படத்தின் டீஸர் ட்ரெண்டாகி வருகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் மேட் ரிவெஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.

இதில் பேட்மேன் கேரக்டரில் ராபர்ட் பேட்டின்சன் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருந்தது. இதனிடையே கொரோனா தொற்று தீவிரமாக பரவியதால் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடர்ந்து 4 மாதங்களாக முடங்கியுள்ளது. தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகளை வரும் செப்டம்பரில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டிசியின் ஃபேன்டொம் நிகழ்ச்சியில் அவர்களின் அடுத்தடுத்த படங்களின் டீஸர் மற்றும் ட்ரைலர்களை வெளியிட்டனர், அதில் தி பேட்மேன் படத்தின் டீஸரும் இடம் பெற்றிருந்தது. இந்த டீசர் மற்ற அப்டேட்களை பின்னுக்கு தள்ளு யூட்யூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தில் andy serkis, John Turturro, Zoë Kravitz ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்தை 2021ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Pages