கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 5908 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது .தமிழகத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் வெளிமாநிலத்தில் இருந்தோ அல்லது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் செல்வதற்கு இ- பாஸ் நடைமுறையில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும், இதற்கு விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை செயலகம் ஆனது மாநிலத்திற்குள் மக்கள் சென்று வர தடை விதிக்கக்கூடாது என தமிழகத்தின் தலைமைச் செயலர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. மாநிலத்திற்குள் மக்கள் சென்று வர தடை விதிப்பது மத்திய அரசின் உத்தரவை மீறுவதாகும் என கூறியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் இந்த இ-பாஸ் ஆனது நடைமுறையில் இருக்கும் மற்ற இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் தேவை இல்லை என அறிவித்துள்ளது.