ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் ‘கோமாளி’. இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே, ஷாரா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த பட்ம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும் பிரதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கோமாளி படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் தனுஷ் படத்தை ரசித்ததோடு மட்டுமில்லாமல் பிரதீப்பை அழைத்து பாராட்டி தனக்கு பொருந்தும் மாதிரியான கதை எதும் உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு பிரதீப் ஒரு ஒன் லைன் கதையை கூறியுள்ளார். அது தனுஷுக்கு பிடித்து போகவே முழுவதுமாக கதையை டெவலப் செய்து வரும்படி கூறியுள்ளாராம். இதனால் விரைவில் தனுஷ் - பிரதீப் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுது.

ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடி இருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான ரகிட ரகிட பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது தான். இந்த படத்தினை தொடர்ந்து ஒரு பாலிவுட் படம் உட்பட தனுஷ் 44 வரை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் தற்போது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் கூட்டணி சேர்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என பொருத்திருந்து பார்ப்போம்...