கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுபவர் நாயகி நயன்தாரா. தொடர்ந்து தனது கேரக்டருக்கு முக்கியதுவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் இவர் இயக்குனர் ஒருவரை ஒரு வருடம் காக்க வைத்த நிலையில் அந்த வாய்ப்பை நடிகை டாப்சி தட்டிப்பறித்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை ஒருவர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை நந்தா பெரியசாமி என்ற இயக்குனர் உருவாக்க முடிவு செய்து அதற்கான கதை திரைக்கதையை முழு அளவில் தயார் செய்து நயன்தாராவிடம் கூறினார். நடிக்க சம்மதம் தெரிவித்தும் கதைக்காக தான் தயாராக கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லிருந்தார். ஆனால், அவர் அந்த கதையை அப்படியே விட்டுவிட்டு மற்ற படங்களில் கவணம் செலுத்தி வந்தார், ஒரு வருடம் காத்திருந்த பெரியசாமியிடம் இந்த கதையை பற்றி பேசிய நடிகை டாப்சி, இந்தக் கதையில் நானே நடிக்கிறேன் நானே தயாரிப்பாளரை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதோடு, நந்தா பெரியசாமிக்கு ஒரு மிகபெரிய தொகையை அட்வான்ஸாகவும் கொடுத்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் நந்தா பெரியசாமி உடனடியாக பட வேலையை தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் ஒரு நல்ல படத்தை நயன்தாரா மிஸ் செய்துவிட்டார் என்றே இயக்குனர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.