தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். அவர் பேசியதாவது: செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டெசிலி சும்மாப், 400 எம்.ஜி வென்டஷ்விர் 100 எம் ஜி , எனாக்ஸபரின் 40 எம் ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனை கருவிகள் என் 95 கவசங்கள் , பாதுகாப்பு உடைகள் பிபிடி கிட்ஷ் மும்முடி முகக் கவசங்கள், சிடி ஸ்கேன் , எக்ஸ்ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கட்டுப்பாடு பகுதிகளில் வாழும் மக்களுக்கும் ஜின் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்திய முறை சிகிச்சை மருத்துவமும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான
சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் பெண் மேன்மையான மக்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. என் நடவடிக்கைகளின் காரணமாக நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 85.45% உள்ள மாநிலமாகவும் மிகக் குறைவான 1.7% இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு வேண்டுமெனில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் இருந்து 4 லட்சத்து 24 ஆயிரத்து 394 இடம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு மாநில அரசினுடைய செலவினில் அனுப்பி வைத்து இருக்கின்றோம். மேலும் 80 ஆயிரத்து 779 வெளிநாட்டு வாழ் தமிழர்களை வந்தே பாரத் மற்றும் சமுத்திர செய்து திட்டத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் காய்ச்சல், சளி ,வறட்டு இருமல், மூச்சு திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு, போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அமையுங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க உணவு குடிநீர் கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டிருந்தபோதிலும் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சியில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவச முகக் கவசங்கள் இலவசமாக மறுமுறை உபயோகிக்கதக்க நூறு வருஷங்கள் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் நியாயவிலை கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்கு அளித்தது முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் ஏழைகள் ,சிறுதொழில் செய்வோர் சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து அவர்களை பாதுகாக்க தமிழ் நாட்டில் உணவுப் பொருட்களை நிலையில்லாமல் வழங்குதல் ஒருக்கா நிவாரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு அம்மாவின் அரசு மிகுந்த அக்கறை செயல்படுத்தியது. இவர் அவர் உரையாற்றினார்.