சினிமா பிரியர்கள் பலரும் வியர்ந்து பார்க்கும் படியான படங்களாக தொடர்ந்து கொடுத்து வரும் ஹாலிவுட் இயக்குனர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டெனட்’.

ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்பட பல பிரபலங்கள் முக்கிய கேரக்கடரில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் கரு கிறிஸ்டோவரின் ஸ்டார்ங் ஃபார்முலாவான டைம் டிராவல் இல்லை. ஆனால், டைம் இன்வர்ஸ் என்கிற அறிவியல் தியரியை வைத்து படம் இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா நான் வைரஸ் காரணத்தினால் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகாமல் சிரமத்தில் உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுபடி செப்டம்பர் 3ஆம் தேதி குறிப்பிட்ட சில திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. தற்போது பிரம்மாண்டமாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வார்னர் ப்ரோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.