காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது ட்விட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் "நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க கோரும் ஜே இ இ மற்றும் நீட் மாணவர்களின் கவலைகளை கவனத்தில் கொள்ளுமாறு மத்திய அரசை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் நீட் மற்றும் ஜே இ இ தேர்வெழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் கருத்துக்களுக்கு செவி மளித்து பிரச்சினைக்கு ஏற்ப சரியான தீர்வை தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்குமாறு தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருவதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.