‘ஆஹா’ என்ற பெயரில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் டோலிவுட் படங்களை டிஜிட்டலில் வெளியிட்டு வருகிறது. அப்படி இவர்களின் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோஹார்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

கொரோனா பரவலால் தயாராகி வெளியாகாமல் இருக்கும் சிறுபடங்களை எல்லாம் வாங்கி, ஓடிடியில் வெளியிட்டு வருகிறது ‘ஆஹா’. இதில் சுதந்திர தினத்தன்று வெளியான ‘ஜோஹார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அங்கித் கோய்யா, நைனா கங்கூலி, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் தெலுங்கில் நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்கள். தெலுங்குப் படத்தை இயக்கிய தேஜா மார்னி, தமிழிலும் இயக்கவுள்ளார்.

தமிழில் யார் தயாரிப்பாளர், யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அனைத்தும் முடிவாகி, முறையாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...