‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் டைரக்டர் மணிரத்னம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் பாலாஜி சக்திவேல் நடிகர் பிரபுவின் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர். மேலும், பெரிய பழவேட்டையராக பிரபு நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பிரபுவுக்கு வேறொரு கேரக்டரை கொடுத்துவிட்டு இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு இந்த கேரக்டரை கொடுத்துள்ளாராம் மணிரத்னம்.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் மத்திய பிரதேசத்தில் துவங்கவுள்ளது. கதைப்படி பெரிய பழவேட்டையர் நந்தினியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வார் ஆதலால் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இதில் ஐஷ்வர்யா ராஜ் கணவனாக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.