வாகன ஓட்டுனரின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் லேர்னர் லைசன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய டிரைவிங் சம்பந்தமான ஆவணங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று நீட்டிப்பு கால அவகாசம் என்பது வழங்கப்பட்டது. பின்பு பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு காலாவதி ஆன டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன ஆவனம் திக்னெஷ் செர்டிபிகேட் உள்ளிட்ட வாகனம் தொடர்பாக உள்ள அனைத்தும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். கொரோனா காரணமாக இந்த சிக்கலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.