பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்யின் 64வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார், படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகளும் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக வேலைகள் நிறுத்தப்பட்டது. ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்காக யாருடன் இணைவார் என்ற ஆவல் அதிகரித்திருந்த நிலையில், முருகதாஸ், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், அஜய் ஞானமுத்து ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது. இறுதிகாக முருகதாஸ் தான் விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார் எனும் செய்திகள் வைரலானது. தற்போது நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது...