பேரமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான G.I. Joe பட வரிசைகளான The Rise of Cobra, Retaliation ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த பட வரிசைகளின் ஸ்பின் ஆஃப் வெர்ஷன் தீவிரமாக உருவாகி வருகிறது.

2013ல் வெளியான Retaliation படத்தை தொடர்ந்து 2018ல் இந்த கதையின் ஸ்பின் ஆஃப் வெர்ஷன் ‘Snake Eyes’ எனும் பெயரில் அறிவிக்கப்பட்டது. படத்தின் ஸ்டோரி டெவலப்மெண்ட் வேலைகளை 2018 டிசம்பரில் இருந்து டைரக்டர் Robert Schwentke கவணித்து வர 2019 ஆகஸ்டில் தான் படத்தின் ஹீரோவாக Henry Golding அறிவிக்கப்பட்டார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் ஜப்பானில் தீவிரமாக நடந்து வந்த வேலையில் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த அக்டோபர் 23ஆம் தேதி ரிலீஸ் ப்ளான் செய்யப்பட்ட இந்த பக்கா ஆக்‌ஷன் மூவி படப்பிடிப்பு வேலைகள் முடியாத காரணத்தால் தற்போது ரிலீஸ் சரியாக ஓராண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. Vancouver, Canada, Japan ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது விரைவில் இதற்கான பணிகள் துவங்கவுள்ளதாம்.