கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், சில நல்ல கதையம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் அடுத்து பிரபல பாலிவுட் பட ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது கோலிவுட் பக்கம் தனது கவணத்தை செலுத்தி வருகிறார். அஜித்தின் ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்டிக்கல் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டவர் கதைக்கு ஹீரோவாக உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் டைரக்டராக ‘கனா’ படத்தின் மூலம் பெரும் வெற்றியை ருசித்த அருண்ராஜா காமராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. சமூக அவலங்களை தோலுறுத்திக் காட்டும் இந்தப் படத்தை கோலிவுட் ரசிகர்களும் வரவேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.