விஜய் டிவி ஒளிப்பரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்தது விஜய் டிவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஓவியாவை போலவே லாஸ்லியா ஆர்மியும் போன சீசனில் உருவாகிருந்தது. இவருக்கு கிடைத்த இந்த வரவேற்பை தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

ஏற்கனவே ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘ஃப்ரென்ட்ஷிப்’, ஆரி அர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் படம், ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ள இவர் மூன்றாவதாக ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Axcess Film Factory தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பூர்னேஷ் அறிமுகமாகவுள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது