90களில் ஃபேமஸான ஹீரோக்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களின் வரவு இவரை மறக்க செய்தது. தற்போது இவர் சீரியல் நாயகிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் டீவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியல் மூலமாக பிரபலமானவர் வித்யா பிரதீப். கோலிவுட்டில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துவந்த இவருக்கு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ நல்ல மதிப்பை பெற்று தந்தது. தற்போது இவர் 90களின் கனவு நாயகன் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘எக்கோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமான இதில் ஆசிஷ் வித்யார்த்தியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.