கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் அவரது அரசியல் வாழ்க்கையில் இருந்தார்.

அண்மைக்காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.அதைத் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என அந்த மருத்துவமனை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது. தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்பொழுது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனி அனுமதிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் மறைந்திருக்கிறார். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வந்து உழைத்து உயர்ந்தவர்களில் இவரும் முக்கியமானவர். அரசியல் வாழ்விலும் ஜொலித்தவர். இவரது மறைவிற்கு திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.