வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் இருந்த இடைவெளிகள் தற்போது மறைந்து இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது. சின்னத்திரையிலிருந்து பலர் வெள்ளித்திரைக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். இதில் சின்னத் திரையின் நயன்தாரா என சொல்லப்படும் வாணி போஜனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

‘ஓ மை கடவுளே’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த மீரா கேரக்டர் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இந்த நிலையில் வாணி போஜன் தனது அடுத்த படத்தையும் கன்ஃபார்ம் செய்துவிட்டார். ‘தாழ் திறவா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பரணி சேகரன் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. படத்தின் கதைக்களத்தை யூகிக்க முடியாத அளவில் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.

இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சின்ன ஊருக்கும் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.