திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளதன் காரணமாக திரைத்துறை சிக்கலில் உள்ளது. இதனையடுத்து சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் சூர்யாவின் முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்கு முன்னரே மேலும் மூன்று படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஃபகத் ஃபாசிலின் 'சி யூ சூன்' செப்டம்பர் 1 ஆம் தேதி அமேசான் பிரைமிலும், 'மணியரயிலே அசோகன்' ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸிலும், 'கிலோ மீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்' படம் ஏசியா நெட் டிவி மற்றும் ஓடிடியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாம். இதனால் இந்த ஓனம் பண்டிகையை ஓடிடியில் கலர்ஃபுல்லாக கொண்டாட தயாராகி வருகின்றனர் மலையாள ரசிகர்கள்.