கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் வெற்றியை கண்ட எஸ் ஜே சூர்யா நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் ‘பொம்மை’. இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என இவர் அறிவித்துள்ளார்.

‘மான்ஸ்டர்’ படத்தின் ஹிட்டை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் படத்தின் பின்னணி இசைப் பணிகளை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முடித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எஸ்.ஜே.சூர்யா “பின்னணி இசையின் அரசன் என சொல்லப்படும் யுவன் பொம்மை படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்துள்ளார். அவரது இசை படத்திற்கு கூடுதல் சிறப்புகளை கூட்டியுள்ளது. விரைவில் உங்களை பாடல்கள் மற்றும் ட்ரைலரோடு சந்திக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.