'கர்நாடகாவின் சிங்கம்' என அழைக்கப்படும் அண்ணாமலை ஐ.பி.எஸ் கரூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக காவல் துறையில் இருந்து தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். பிறகு WE THE LEADRERS என்னும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பல உதவிகளை செய்து வருகிறார். இவர் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் ஜனதா கட்சியில் இணைந்தேன் என கூறினார். மேலும் தமிழ்நாட்டில் திராவிட கொள்கையானது உச்சநிலையை அடைந்து விட்டது எனவும் தற்போதுள்ள திராவிட கட்சிகள் திராவிடக் கொள்கையை தெளிவுற பயன்படுத்துவதில்லை என குற்றம்சாட்டினார்‌. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது மேலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் கட்சியாகவும் ஊழல் குறைவாக இருக்கும் கட்சியாகவும் திகழ்கிறது. திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியாகவும் இது இருக்கிறது எனக் கூறினார். மேலும் நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த எண்ணமும் கொண்ட கட்சியாக இருக்கிறது என புகழாரம் சூட்டினார்.