தமிழகத்தில் பொது முடக்கத்தில் அடுத்தகட்ட தளர்வு களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார். பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதற்கான தமிழக அரசு அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியாகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் என்பது நீட்டிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தளர்வுககளை பொறுத்தவரை என்னவென்றால்
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பாஸ் நடைமுறை என்பது தமிழகத்தில் அமலில் இருக்கிறது.

அதை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுப் போக்குவரத்து தான பேருந்தை அதனையும் அனுமதி அளிப்பது தொடர்பான இணையம் முதற்கட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று பேசியது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வது பொதுப் போக்குவரத்து வசதியை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு மேலாக வெளியிடுகிறார்.
செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் பொது முடக்கத்துடன் பல்வேறு தளர்வுகளை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே தொடர்ச்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இ பாஸ் நடைமுறை ஆகட்டும் பொது போக்குவரத்து சேவை ஆகட்டும் உள்ளிட்ட இது தவிர வழிபாட்டு தலங்களை திறப்பது, அத்தியாவசிய கடைகளுக்கான நேரங்களை நீட்டிப்பது, போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு வணிகர்கள் ஒரு கோரிக்கையாக வைத்திருந்தனர். இதுதொடர்பான நடவடிக்கைகளை நேற்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டன. மத்திய அரசை பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அன்லாக் 4.0 வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த அம்சங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதை சார்ந்த நடவடிக்கையாகவும் தமிழக அரசு எடுக்கும் என்று தெரிகிறது.