கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இங்கு உள்ள நிலையில் இவரின் படத்தை பாலிவுட் நடிகர் ஒருவர் மிகவும் பிற்போக்குதனமானது என விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் தனது முத்திரையை பதித்த தனுஷ் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த படம் தான் ‘ராஞ்சனா’. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தனுஷுக்கு பாலிவுட்டிலும் நல்ல துவக்கத்தை கொடுத்திருந்தது. இந்நிலையில் படம் வெளிவந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தின் கதை மிகவும் பிற்போக்குத்தனமானது என சக பாலிவுட் நடிகரான அபய் தியோல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமர்சகர் ஒருவரின் பதிவை பகிர்ந்த அவர் ‘ஒருவரை காதலிக்கும் வரை துரத்துவதும், அந்த நபர் திரும்ப உங்களை காதலிப்பதும் சினிமாவில் மட்டுமே நடக்கும். ஆனால் நிஜ வாழ்வில் அது பாலியல் துன்புறுத்தலில்தான் முடியும் . என கூறி இந்த விமர்சகர் சொல்லியிருக்கும் கருத்துகளை தயவு செய்து படியுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்...