தெலுங்கு திரையுலகில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் தான் ‘ஆச்சார்யா’.
‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து சிரஞ்சீவி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென படத்தில் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து த்ரிஷா விலகினார்.
இதனால் த்ரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சீரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ஆச்சார்யா’ படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இது டோலிவுட் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.
Saturday, August 22, 2020
Home
Chiranjeevi
Cinema
Gift given by the film crew to Mega Star Chiranjeevi
Mega star
mega star news
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு படக்குழு கொடுத்த பரிசு...
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு படக்குழு கொடுத்த பரிசு...
Tags
Chiranjeevi#
Cinema#
Gift given by the film crew to Mega Star Chiranjeevi#
Mega star#
mega star news#
Share This
About Expat guru
mega star news
Tags
Chiranjeevi,
Cinema,
Gift given by the film crew to Mega Star Chiranjeevi,
Mega star,
mega star news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment