பெரும் சர்ச்சைகளை கடந்து துவங்கிய படம் சிம்புவின் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லி கேரக்டரில் இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் தொடங்கிய ‘மாநாடு’ திரைப்படம் கொரோனா பீதியால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவோடு எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்நிலையில் முக்கியமான ஒரு வில்லிக் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சனா கீர்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இவர் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28 -2’ல் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் மூலம் தனக்கு சினிமாவில் திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கையோடு இருக்கிறார் அஞ்சனா. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.