இணைத்தில் காட்டுத் தீயாய் பரவிவரும் ‘தி பேட்மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். டிசி காமிக்ஸ் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ‘தி பேட்மேன்’.

பேட்மேன் கேரக்டரில் ராபர்ட் பேட்டின்சன் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருந்தது. இதனிடையே கொரோனா தொற்று தீவிரமாக பரவியதால் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 4 மாதங்களுக்கு பிறகு செப்டம்பரில் ஷூட்டிங்கை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் மேட் ரிவெஸ்..மேலும் இப்படத்தில் andy serkis, John Turturro, Zoë Kravitz ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்தை 2021ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தனர், ஆனால் ஷூட்டிங் இத்தனை மாதங்கள் தடைப்பட்ட காரணத்தால் அக்டோபருக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.