2017ல் Patty Jenkins இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிருந்த டிசி காமிக்ஸ் படம் தான் ‘ஒண்டர் உமன்’. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்டு உருவாகிருந்த இந்த படத்தில் ஒண்டர் உமனா நடித்து அசத்திருந்தார் Gal Gadot.

தொடர் தோல்விகளிலும் நஷ்டத்திலும் இருந்து மீள முடியாமல் இருந்த டிசி நிறுவனத்திற்கு பெரும்ஊக்கத்தை அளித்தது இந்த ‘ஒண்டர் உமன்’ தான். படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் ரெண்டாவது பாகம் ‘ஒண்டர் உமன் 84’எனும் டைட்டிலில் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரிலீஸுக்காக உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தள்ளிச் சென்றது.

முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கு ரசிகர்களை தயார் செய்யும் விதமாக ஒரு பவர் பேக் ட்ரைலரை வெளியிட்டுள்ளது வார்னர் ப்ரோஸ் நிறுவனம். இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.