நீட் , ஜெஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது என கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் இருந்து பாஜக அல்லாத 6 மாநிலங்களின் முதலமைச்சர்களோடு ஆலோசனை ஆனது நேற்றைக்கு முன்தினம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து இரண்டாம் வாரம் வரை நடைபெற இருக்கக்கூடிய ஜேஇஇ தேர்வுகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் அதனை தள்ளி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டிருந்தது. நீதிமன்றத்தால் கட்டாயம் தேர்வுகள் நடக்கட்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ,சட்டீஸ்கர் , ராஜஸ்தான் ,பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கேபினட் அந்தஸ்தில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. தற்போதைய இருக்கக் கூடிய சூழலில் கொரோனா அச்சம் காரணமாக இந்தத் தேர்வுகளை நடத்த முடியாது என்ற ஒரு தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இரு தினங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட இதை விஷயங்கள் தான் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் அனைத்து எதிர்க்கட்சி மாநில அரசுகளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் சட்ட போராட்டம் நடத்த வேண்டும் இக்கட்டான சூழலில் இந்த தேர்வுகளை நடத்துவது என்பது முடியாத காரியம் என்பதை அவர் திட்டவட்டமாக கூறி இருந்தார். மாணவர்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு சார்பில் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும் கூட தேர்வு நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தத் தேர்வுகளை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமையின் இயக்குனரும் கூட தேர்வில் கட்டாயம் நடத்தப்படும் எந்த வகையிலும் பின்வாங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.