தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, சிவகங்கை,விருதுநகர், சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை ,விருதுநகர், தேனி ,திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மகராஷ்ட்ரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென் தமிழகத்தை ஒட்டி கடல் மட்டத்தில் இருந்து 1.5 உயரம் வரை வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாகவும் இன்று உள் மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் மதுரை ,திருச்சி, சிவகங்கை ,விருதுநகர், சேலம் ,நாமக்கல் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்

நாளை சிவகங்கை, விருதுநகர் ,தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ,சேலம், தர்மபுரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ,ஏனைய உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் இவ்வாறு அவர் கூறினார்.