தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இன்று முதல்வர் ஆட்சித் தலைவர் களுடனும் , மருத்துவ நிபுணர்களுடனும் நடத்திய ஆலோசனையில் மேலும் சில தளர்வுகள் அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

என்ற நிலையில் இந்த மாதம் தொடர்ந்து ஐயாயிரத்திற்கும் மேலே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்திலிருந்து 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேர் தொற்றுஉள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளன ர். அதேபோல் பரிசோதனைகளின் எண்ணிக்கை என்றைக்கும் இல்லாத அளவிற்கு கொரோனா பரிசோதனையானது உயர்த்தப்பட்டிருக்கிறது.

இன்று ஒரு நாளில் மட்டும் 80988 ஆர் டி பி சி ஆர் பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 ஆர் டி பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.அதேபோல் தனிநபர் பரிசோதனையும் என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எழுபத்தி எட்டாயிரத்து தொள்ளாயிரத்து மூன்று நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் இன்று மேற்கொண்டிருக்கிறார்கள்.