பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் வினோஜ் செல்வம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், பாஜக அதிமுக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளதாக கூறினார். மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்த எல். முருகன், பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறினார்.

அவர் கூறியதாவது: யார் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்று அந்த கணக்கெடுப்பை எதிர்த்து பார்த்தாலே தெரியும். அதனால் நாங்கள் 60 சட்டமன்ற தொகுதிகளில் எங்களால் தனித்து நிற்க கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கு. அந்த இடத்தில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. என்று அவள் கூறினார்.