கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிருக்கும் படம் ‘க/பெ ரணசிங்கம்’. இந்த படத்தினை வாங்கி வெளியிட ஜீ5 நிறுவனம் ஆர்வம் காட்டுகிறதாம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். முன்னதாக இவர்கள் இவருவம் ரம்மி, பண்ணையாரும் பத்மினுயும், தர்மதுரை போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த கூட்டணியில் வந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த ‘க/பெ ரணசிங்கம்’ படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் .படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. திரையரங்குகள் திறக்காமல் இருப்பதால் இந்த படத்தையும் ஓடிடியில் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது படக்குழு.

விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. முன்னதாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்த இவர்களின் நிலையில் இவர்கள் எதிர்ப்பார்த்த தொகைக்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஜி 5 நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாம். விரைவில் ஜீ 5 தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.