பஞ்சாபில் உள்ள டான்டரன் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஊடுருவல் தடுக்கப்பட்டது. அவர்களின் கையில் ஏகே 47 ரக துப்பாக்கிகளும் கையெறி குண்டுகளான கிரானைட் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனும் எல்லை பாதுகாப்புப் படையினர் தாக்கிய அதிரடித் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் . இந்த ஊடுருவல் எதற்காக என்றும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனும் படைவீரர்கள் அவர்களது பணியே எல்லையில் ஊடுருவலை தடுப்பது மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவது. ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் அல்லாத மற்ற அனைத்து முக்கிய எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தாக்குதல் சுதந்திர தினம் முடிந்த சிறிது நாட்களிலேயே நடந்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .