அனைவரது மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்த பிக் பாஸ் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 4 இதற்கான உட்கட்டமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்ற வண்ணம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 3 வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இடையிடையே பல சிக்கல்கள் வந்திருந்தாலும் வெற்றிகரமாக 4 சீசனுக்கு வருகிறது.

சமூக வலைதளங்களில் கமல் அவர்களின் புகைப்படம் ஆனது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் கமல் அவர்கள் வெள்ளை தாடியுடன் முறுக்கு மீசையும் கொண்ட கம்பீரமாக இருக்கும் புகைப்படம் அமைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் சண்டை, காதல் தோல்வி, அழுகை, தற்கொலை முயற்சி போன்ற காட்சிகளோடு விறுவிறுப்பாக இருக்கும். இந்நிலையில் சீசன் 4 ஆன மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.