ஊரடங்கில் நான்காம் கட்ட தளர்வை அறிவித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செப்டம்பர் 30-ம் தேதி வரைக்கும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை துவங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது தவிர மத கலாச்சார ரீதியிலான, அரசியல் ரீதியிலான ஒன்றுகூடல்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது 100 பேருக்கு மிகாமல் 100 க்கும் குறைவாக எண்ணிக்கை கொண்ட கலாச்சார ரீதியிலான, மத ரீதியிலான, விளையாட்டு ரீதியிலான கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 21 முதல் ஓபன் யர்என்ற திரையரங்கத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி ,கல்லூரி நிறுவனங்களைப் பொறுத்தவரை அதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.அதேபோல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு சென்று வரலாம் என்று சொல்லியிருக்கிறது. வகுப்புகள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை என்பது இருக்கிறது.

இருப்பினும் மற்ற சில தேவைகளுக்காக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று வரலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தற்போதைய நோய் பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகள் கல்லூரிகள் கல்லூரி நிறுவனங்கள் உள்ளிட்ட வற்றிக்கு தடை செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல் சினிமா ஹால் , ஸ்விம்மிங் ஃபுல் , பொழுதுபோக்கு பூங்காக்கள்,தியேட்டர் உள்ளிட்டவற்றிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.