தொடர்ந்து வசூலில் தோல்வியை சந்தித்து வந்த டிசி காமிக்ஸ்கு புத்துயிர் கொடுத்தது ‘அக்வாமேன்’ படம் தான். உலகளவில் 850கோடிக்கு மேல வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. இது டிசி காமிக்ஸில் அதுவரையில் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது.

இதனை தொடர்ந்து ‘அக்வாமென் 2’ படத்திற்கான வேலைகளை தொடங்கியது வார்னர் ப்ரோஸ் நிறுவனம். Jason Momoa லீட் ரோலில் நடிக்க பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் James Wan இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நடிகர் Patrick Wilson இந்த படத்தில் ஒரு முக்கியமான கேஎரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். David Leslie Johnson-McGoldrick இணைந்து இந்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் ரிலீஸுக்கு தயாராகிவரும் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகளை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தை விடவும் அதிக விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இந்த படத்தில் இருக்கும் என்பதை இயக்குனர் ஜேம்ஸ் வான் உறுதிப்படுத்தியுள்ளார்.