‘பாகுபலி’ படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுதும் கவணிக்கத்தக்க ஹீரோவாகிவிட்டார் பிரபாஸ். தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘ராதே ஷ்யாம்’.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வருகிறது. ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் மீதமுள்ள படப்பிடிப்பு தடைப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் தயாராகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே உலகளவில் ட்ரெண்டாகி சாதனை படத்திருந்தது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2 ஆம் வாரத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த கையோடு தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘ஆதிபுருஷ்’ பட வேலைகளை துவங்க உள்ளார் பிரபாஸ்.