ஒரு கன்னட மொழி படம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த மெகா ஹிட்டடித்தது என்றால் அது நிச்சம் யஷ் நடிப்பில் வெளியான ‘கேஜிஎஃப்’ படமாக தான் இருக்கும். கதை, திரைக்கதை, பின்னணி இசை என அனைத்திலும் கவர்ந்திழுத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரஷாந்த் நீல் இயக்கி வரும் இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் கதையின் மெயின் வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் , முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர்ல் நடிக்கிறார். இந்த ஆண்டு சம்மர் விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட்ட இந்த கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே இயக்குனர் பிரஷாந்த் நீல் எஞ்சிய படப்பிடிப்பு வேலைகளை முடிக்க பணிகளை துவங்கிவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்....