நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ .1 ரூபாய் அபராதத்தை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக அவரது வழக்கறிஞர் ரூ.1 ரூபாய் கொடுக்கும் புகைப்படத்தை பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் பூஷன் "ஒவ்வொரு இந்தியனும் உறுதியான சுதந்திரமான நீதித்துறை வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனவும் நீதிமன்றங்கள் பலவீனம் அடைந்தால் அது ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் என பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் வெல்வது ஒவ்வொரு குடிமகனும் வெல்வதை போன்றது. இந்திய குடிமக்கள் அனைவரும் உறுதியான சுதந்திரமான நீதித்துறை வேண்டுமென்று விரும்புகிறார்கள். நீதிமன்றங்கள் பலவீனம் அடைந்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த வழக்கு தொடர்பாக எனக்கு ஆதரவாக இருந்த முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், குடிமக்கள் அனைவருக்கும் நன்றி" என அவர் பேட்டியளித்துள்ளார்.