தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தியேட்டர்கள் திறக்கும் வரை ரசிகர்கள் பொறுமைகாக இருக்க வேண்டும், அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் பெரிய திரையில் தனுஷ் ரகிடரகிட செய்வதை பார்க்க மொத்த படக்குழுவும் காத்திருக்கிறது. என்று குறிப்பிட்டு ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சசிகாந்தின் ட்வீட்டை தனுஷ் ரீட்வீட் செய்துள்ளார். ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் தான் ரிலீஸாகும் என்று சசிகாந்த் கூறியது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால். உண்மையில் தயாரிப்பாளருக்கு இப்படி கூறியதற்கு வேறொரு காரணம் உள்ளதாம், ஓடிடி வியாபாரத்தில் முதலீட்டை விட 10 கோடி நஷ்டம் வருவதால் சசிகாந்த் தியேட்டரிலே ரிலீஸ் செய்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நடிகர்களின் படங்களாக இருந்தாலும் ஓடிடி நிறுவனம் அவர்களின் வியாபாரத்தில் மிகவும் உறுதியாக இருப்பதால் 100 கோடி பிஸ்னஸுக்கெல்லாம் இங்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.